1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:02 IST)

பாய்ஸ் படத்தில் நடிக்க புகைப்படம் அனுப்பினேன்… விஜய் சேதுபதி பகிர்ந்த ரகசியம்!

நடிகர் விஜய் சேதுபதி பாய்ஸ் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய புகைப்படத்தை அனுப்பி இருந்ததாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இப்போது அவருக்கு மற்ற மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம் ரிலிஸாக உள்ள லாபம் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அது சம்மந்தமான ஒரு நேர்காணலில் அவர் ‘ஷங்கர் பாய்ஸ் படத்துக்காக நடிகர்கள் தேர்வு நடத்திய போது அதில் நடிக்க தானும் புகைப்படம் அனுப்பியதாகவும் ஆனால் அதில் தேர்வாகவில்லை என்றும் கூறியுள்ளார். அதன் பின்னர் படிப்படியாக கிடைத்த வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு கதாநாயகனாகி இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.