வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:47 IST)

ஓடிடி ரிலீஸ் இல்லை: டாக்டர் படக்குழு அதிரடி முடிவு!

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் ஓடிடி ரிலீசுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டதாகவும் தங்களை தாங்களே பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொள்ளும் யூடியூப் நடத்தும் சிலர் வதந்திகளைப் பரப்பி விட்டனர் 
 
ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இது குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி டாக்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் உறுதி செய்து விட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
அனேகமாக டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்