1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (19:50 IST)

ஓடிடியில் ரிலீஸ் செய்வது ஏன்? சூர்யா முடிவின் பின்னணி இதுதான்!

சூர்யா நடிப்பில் உருவாகிய ’சூரரைப்போற்று’ திரைப்படம் நேற்று முன்தினம் வரை திரையரங்கில் தான் வரும் என படக்குழுவினர் உறுதியாக தெரிவித்து வந்தனர். ஆனால் திடீரென நேற்று சூர்யா விடுத்த அறிக்கையில் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவித்தார் 
 
இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் சூர்யா ஓடிடியில் தனது படத்தை ரிலீஸ் செய்ய என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
சூரரைப்போற்று படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 60 கோடி ஆகும். இந்த 60 கோடியை அப்படியே அமேசான் நிறுவனம் தருவதாக ஒப்புக் கொண்டதால் தான் சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சன் டிவிக்கு ஏற்கனவே சாட்டிலைட் உரிமையை விற்றதன்மூலம் ரூபாய் 20 கோடி கிடைத்துள்ளது. வெளிநாட்டு உரிமைகளின் மூலம் 15 கோடி, ஹிந்தி டப்பிங் உரிமைகளை மூலம் 20 கோடி என ஏற்கனவே கிடைத்துள்ளதால் கிட்டத்தட்ட 40 முதல் 50 கோடி வரை சூர்யாவுக்கு இந்த படத்தினால் லாபம் கிடைத்துள்ளது. அதனால் சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக சூர்யா கருத்துக்களை தெரிவித்து வருவதால் ஒருவேளை திரை அரங்குகளில் இந்தப் படம் திரையிடப்படும்போது அரசால் பிரச்சினை வரலாம் என்ற அச்சமும் சூர்யாவுக்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது
 
இதனால்தான் அவர் ஓடிடி தளத்தை தேர்வு செய்துள்ளார் என்றும், தொடர்ச்சியாக அவர் ஓடிடி தளத்தை தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது