செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (17:39 IST)

கிராமத்து பாட்டிகளின் Airplane பயணம் - சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ!

நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.
 
சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறான சிம்ப்ளி ப்ளை ( தமிழில் வானமே எல்லை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்ப்போது இப்படத்தில் இதுவரை விமானத்தில் பயணம் செய்யாத கிராமத்து பாட்டிகள் பயணம் செய்த காட்சி இடம்பெற்றிருந்தது.  தற்போது அதன் மேக்கிங் வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் அனைவரும் சூர்யாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து புகழ்ந்துள்ளனர்.