செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2020 (17:42 IST)

அடுக்கடுக்கான அப்டேட்.... சூரரை போற்று படத்தின் செம சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சூரரை போற்று'. விமானி ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக நடுவானில் விமானத்தில் நடத்தப்பட்டது.

மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மே 1ம் தேதி வெளியாவதாக கூறப்பட்ட இப்படம் கொரோனா ஊரடங்கினால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. இதற்கிடையில் சூர்யாவும் பொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸ் வேளைகளில் பிஸியாகிவிட்டார். கொரோனா முடிந்து தான் படம் வெளியாகும் என சுதாரித்துக்கொண்ட ரசிகர்களுக்கு திடீரென செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சூர்யா.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் சத்தமேயில்லமல் முடிந்துள்ளது.  படத்திற்கு "U" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகிறது. மேலும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடனே சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன் சூர்யா இப்படத்தில் விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் கேரக்டரில் நடித்துள்ளாராம். சூரரை போற்று உங்களுடன் உயரமாக பறக்கவுள்ளது.  "Our Maara is ready for action" என 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் ரசிகர்களை அலார்ட் செய்துள்ளது.