1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 28 மே 2020 (17:10 IST)

சூரரைப் போற்று அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய சூர்யா - வீடியோ!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சூரரை போற்று'. விமானி ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக நடுவானில் விமானத்தில் நடத்தப்பட்டது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர். நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கொரோனா ஊரடங்கினால் ரிலீஸ் தள்ளிச்சென்றுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் ரசிகர்களுக்கு சூரரைப் போற்று படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, இப்படத்தில் இருந்து மேலும் இரண்டு புதிய பாடல்கள் விரைவில் வெளியிடப்படும்! இது மிகவும் நன்றாக வந்துள்ளது .. இந்த படம் என் மனதிற்கு நெருக்கமான படமாக அமைந்துள்ளது. எனவே படத்தை திரையரங்கில் பார்க்க மிகுந்த ஆவலோடு  காத்திருக்கிறேன் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் .