செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (13:36 IST)

எஸ்.ஜே,சூர்யாவின் பொம்மை பட அட்டகாசமான அப்டேட் இதோ!

மான்ஸ்டர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் தான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்தது.

இந்நிலையில் அடுத்தகட்டமாக படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வந்த நேரத்தில் தான் கொரோனா வைரஸ் வந்து அத்தனை வேலைகளை ஆஃப் செய்துவிட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் இருந்து சற்று தளர்வுகள் ஏற்பட்டுள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகிறது.


அந்தவகையில் தற்போது, பொம்மை படத்தின் DI எனப்படும் கலர் கரெக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக படக்குழுவினர் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். அந்த போட்டோவை பார்க்கையில் பாடல் காட்சிகளுக்கு கலர் கரெக்ஷன் செய்து போல் தெரிகிறது. மேலும், இந்த பணிகளை செய்ய குறைந்த ஆட்களை கொண்டு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து வருவதாக செய்திகள் கூறுகிறது.