ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (08:34 IST)

ரிலீசுக்கு முன்னரே ஆன்லைனில் லீக்: சூரரை போற்று படக்குழு அதிர்ச்சி

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவம்பர் 12ம் தேதி அதாவது இன்று அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்யப்படுடதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நேற்று இரவு 10 மணி முதலே பெரும்பாலான நாடுகளில் ரிலீசாகும் என்ற தகவல்கள் வந்தன 
 
அதேபோல் பல நாடுகளில் நேற்று இரவு 10 மணிக்கு சூரரைப்போற்று படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சில நாடுகளில் 10 மணிக்கு முன்பே ஆன்லைனில் லீக் ஆகி விட்டதாகவும் டெலிகிராம் உள்ளிட்ட செயல்களிலும் லீக் ஆகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இதனால் சூரரை போற்று படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
தியேட்டரில் ரிலீஸ் ஆகும்போது மறுநாள்தான் பைரஸி தளங்களில் ரிலீஸ் ஆகும். ஆனால் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் ரிலீஸுக்கு முன்னரே பல பைரஸி தளங்களில் ரிலீஸாவது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிலீஸுக்கு முன்னரே டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சூரரைப்போற்று ரிலீசானது படக்குழுவினர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது