ஆன்லைன் சூதாட்டம்....’’பாக்கெட் நிரப்புவதிலேயே பிரபலங்கள் கவனம்’’ - நீதிமன்றம் சாடல்
சமீபகாலமான ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் இளைஞர்கள் பணத்தை பெருமளவில் இழந்து அதிலிரிந்து மீளமுடியாமலும், பணம் போன துக்கத்திலும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவை உலுக்கி எடுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆன்லைன் ரம்மியின் விளம்பரம் செய்து வரும் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு இதுகுறித்து கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை, பிரபலங்கள் பாக்கெட் நிரப்புவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். பொதுநலம் குறித்த அக்கறை இல்லையில்லை என்று சாடியிருந்தது.
இதையடுத்து, தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிடக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
அதில், தமிழகத்தில் தமிழ் இல்லையென்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும். இட ஒதுக்கீடு முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்காலத் தடை விதிக்கக்கூடாது எனக் கேள்விஎழுப்பியுள்ளது.