திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (13:09 IST)

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை! – அமைச்சர் திட்டவட்டம்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள், வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ”ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என கூறியுள்ளார்.