புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (09:02 IST)

விஜய்யை முந்துகிறார் சூர்யா: பரபரப்பு தகவல்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருப்பதாகவும் இதனை தொடர்ந்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் பணிகள் தொடங்க இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் முதல் கட்டமாக விஜய் வரும் திங்கள் முதல் தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் மாளவிகா மோகனன் உள்பட இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் நடைபெறும் 
 
இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் இந்த தேதியில் இந்த படம் சோலோவாக ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் 9ஆம் தேதி சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் போதுமான தியேட்டர் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த படம் ஏப்ரல் 16ம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் வெளிவந்தது 
 

விஜய்யை முந்துகிறார் சூர்யா
இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மாஸ்டர் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே அதாவது மார்ச் 20ஆம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் அடுத்த வாரம் முதல் சூரரைப்போற்று படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்படும் என்றும் முதல் கட்டமாக ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே விஜய் படத்திற்கு முன்னரே சூர்யாவின் படம் வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது