வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (13:10 IST)

அவர் சூர்யா ரசிகர் இல்லப்பா.. கோத்து விட்றாதீங்க! – 2டி நிறுவனம் ட்வீட்

சூரரை போற்று ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யாவுடன் ரசிகர் ஒருவர் எடுத்துக் கொண்டதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில் அவர் சூர்யா ரசிகர் இல்லை என 2டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் “சூரரை போற்று”. விமானி ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படம் சூர்யா ரசிகர்களால் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் ‘வெய்யோன்சில்லி” ஆடியோ வெளியீட்டு விழாவை பிரத்யேகமாக விமானத்தில் நடுவானில் நடத்தியிருக்கின்றனர் படக்குழுவினர். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் விமானத்தில் நடுவானில் நடைபெற்ற இந்த விழாவில் சூர்யா மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் சூர்யாவுடன் அவரது தீவிர ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யாவின் ரசிகர்கள் நடத்தும் ட்விட்டர் பக்கங்களில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அந்த பதிவுக்கு பதிலளித்துள்ள 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் “அவர் சூர்யா ரசிகர் இல்லை. விகடன் பத்திரிக்கையை சேர்ந்தவர்” என்று பதிலளித்துள்ளனர்.