திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (16:16 IST)

தெலுங்கு அசுரன் டீசர் பார்த்து அப்செட் ஆன ஜி வி பிரகாஷ் – காரணம் இதுதான்!

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான் திரைப்படம்  அசுரன். தனுஷின் சினிமா கேரியரில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் 100 கோடி அளவுக்கு வசூலானது என சொல்லப்பட்டது . இந்த படத்தின் வெற்றி பிற மொழி தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க இப்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகியுள்ளது அசுரன்.

தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு அவர்களுடன் இணைந்து இந்த படத்தை தெலுங்கில் தயாரிக்கின்றார் தாணுவே தயாரித்துள்ளார். மணிசர்மா இசையமைக்கிறார். இந்நிலையில் அந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிகை பிரியா மணி நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்த டீசரில் முழுக்க முழுக்க ஜி வி பிரகாஷ் அசுரன் படத்துக்காக அமைத்த இசையை அப்படியே பயன்படுத்தி உள்ளனராம். ஆனால் மரியாதைக்கு கூட ஜி வி பிரகாஷின் பெயரை போடவில்லையாம்.