வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:13 IST)

அனுமதி கிடைத்தும் படப்பிடிப்புக்கு வர மறுக்கும் நடிகர்கள் யார் யார்? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை என்றாலும் தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. இதனை அடுத்து பல திரைப்படகுழுவினர் படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்
 
அடுத்த வாரம் முதல் அனைத்து படப்பிடிப்புகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிம்பு, விஜய் ஆண்டனி, விஷால், ஆர்யா உள்பட ஒருசில நாயகர்கள் படப்பிடிப்பு எப்போது என்று படக்குழுவினர் கேட்டு வருவதாகவும் விரைவில் இவர்களுடைய படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் பெரிய நடிகர்கள் சிலர் படப்பிடிப்புக்கு வர மறுப்பதாகவும் ஒரு தகவல் கோலிவுட்டில் கசிந்து வருகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை என்றாலும் பெரிய படங்களின் படப்பிடிப்பு இப்போதைக்கு நடக்காது என்றும் அப்படியே நடந்தாலும் அந்த நடிகர்கள் இல்லாத காட்சிகள் மட்டுமே படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது இசையின் அடுத்த படம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதால் உறுதிசெய்யப்படவில்லை 
 
இந்திய அளவில் அமீர்கான், அக்சய்குமார், அமிதாப் பச்சன், மோகன்லால், சிரஞ்சீவி, சுதீப் உள்பட பெரிய நடிகர்கள் படப்பிடிப்புக்கு வர தயாராக இருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் மாஸ் நடிகர்கள் படப்பிடிப்புக்கு வர தயங்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது