எப்படியிருந்த ஆயுஷ்மான் இப்படி ஆயிட்டார்!? – ரசிகர்கள் அதிர்ச்சி

ayushman
Last Modified திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (18:36 IST)
படத்துக்கு படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் தோன்றும் இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா தனது அடுத்த படத்திற்காக போட்டுள்ள வேடம் பலரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

குறுகிய காலக்கட்டத்தில் இந்தியில் மிகப்பெரும் ஸ்டார் நடிகராக மாறியவர் ஆயூஷ்மான் குரானா. வித்தியசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவருக்கு இந்தியா முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பார்வையற்றவராக இவர் நடித்த “அந்தாதுன்” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

சமீபத்தில் பிராமண காவல் அதிகாரியாக நடித்த “ஆர்ட்டிக்கிள் 15” படமும் ஹிட் அடிக்க, தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றன. “ட்ரீம் கேர்ள்” என்ற படத்தில் பெண் வேடமிடும் நாடக நடிகராக நடிக்கும் ஆயூஷ்மான், “பாலா” என்ற படத்தில் வழுக்கை தலையோடு வயதான கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவரது வழுக்கை தலை தோற்றத்தை பார்த்த அவரது புது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அவரது பழைய ரசிகர்களோ “இவர் இப்படி வித்தியாசமாக நடிப்பார் என்பது தெரிந்ததுதானே” என தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்து கொள்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :