வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (11:12 IST)

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

monsoon
அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் வழக்கம் போல் ஜூன் ஒன்றாம் தேதி இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 
 
ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் கால தாமதம் ஆகி வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவில் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்குவதாகவும் ஆனால் அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran