வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 மே 2022 (19:44 IST)

சோனம் கபூர் வெளியிட லேட்டஸ்ட் கர்ப்பகால புகைப்படம்…. இணையத்தில் வைரல்!

நடிகை சோனம் கபூர் இணையத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகள் சோனம் கபூர். நடிகை சோனம் கபூர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் கடந்த 2018 ஆம் ஆண்டு சாபரியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அந்த ஆண்டில் பிலிம்பேர் நடிகைக்காக சிறந்த அறிமுக விருது அவருக்குக் கிடைத்தது.  அதே ஆண்டில் ரன்கபீருடன் இணைந்து ஸ்டார் ஸ்கிரீன் விருது அவருக்குக் கிடைத்தது.

இவர் தொழிலதிபரான ஆனந்த் அகுஜா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தனது கர்ப்பமான வயிறுடன் இருக்கும் லேட்டஸ்ட்  செல்ஃபி புகைப்படத்தை பகிர இணையத்தில் பகிர அது இப்போது வைரல் ஆகி வருகிறது.