1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (15:52 IST)

சிறுமியை கர்ப்பமாக்கிய 14 வயது மாணவன் கைது

abuse
கேரளாவில் சிறுமியை கர்ப்பமாக்கிய 14 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மா நிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த      16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்கள் வேலைக்குச் சென்ற பின் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இவர்கள் வீட்டிற்கு அருகில், ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர்.அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். அவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இவர் அடிக்கடி, சிறுமியின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இந்த   நிலையில் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தனர்.

தற்போது சிறுமிக்கு 16 வயதே ஆவதால் மருத்துவமனை நிர்வாகம் போலீஸிக்கு தகவல் கொடுத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமியின் வீட்டிற்கு வந்த சிறுவன் அவரை பலாத்காரம் செய்து அவரை மிரட்டியதாகவும் சிறுமி போலீஸில் தெரிவித்தார்.
சிறுவன் மீது போக்சோவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.