ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:39 IST)

மனைவி கர்ப்பம் தரிக்க ஆயுள் தண்டனை கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கிய நீதிமன்றம்!

prisoner
ஆயுள் தண்டனைக் கைதியின் மனைவி கர்ப்பம் தரிக்க கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் நந்தலால் என்பவரின் மனைவிம் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்
 
அதில் தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள உரிமையை உள்ளதாகவும் எனவே எனது கணவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆயுள் தண்டனை கைதியின் மனைவியின் உணர்வு மற்றும் சூழ்நிலைகளை நீதிமன்றம் மதிப்பதாகவும் ஒரு கைதியின் மனைவியாக இருந்தாலும் அவருக்கு வாரிசு பெறுவதற்கு உரிமை உண்டு என்றும் எனவே ஆயுள் தண்டனை கைதிகு 15 நாட்கள் பரோல் வழங்கப்படுவதாகவும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது