திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (10:53 IST)

செல்வாக்குள்ள 50 இந்தியர்கள் பட்டியலில் நயன்தாரா

2018-ம் ஆண்டின் செல்வாக்குள்ள 50 இளம் இந்தியர்கள் பட்டியலை ஜிகியூ என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
40 வயதுக்குள் பொழுதுபோக்கு, விளையாட்டு, வியாபாரம் உள்பட பல்வேறு துறைகளில் மக்களை கவர்ந்த செல்வாக்கான நபர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழும் 33 வயதான நடிகை நயன்தாரா இடம் பெற்று  உள்ளார். தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக (ரூ.6 கோடி) உள்ளார்.
 
இந்த பட்டியலில் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் இயக்குனர் பா. ரஞ்சித் இடம் பெற்றுள்ளார். இதேபோல் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மலையாள நடிகை பார்வதியும் இடம் பெற்றுள்ளார். இத்துடன் நடிகைகள் டாப்சி, அலியாபட், இந்திய  கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோரும் இடம் பெற்றுள்ளார்கள்.