திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2019 (15:18 IST)

கவின் ஏன் பணத்தை எடுத்துக்கொண்டு போனார்? பதில் அளிக்கும் கமல்!!

கவின் ஏன் வீட்டை விட்டு வெளியேறினார் என்ற கேள்விக்கு கவின்தான் பதில் அளிக்க வேண்டும் என பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 
 
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக கடைசி வரை தாக்குபிடித்து வந்த கவின், பிக்பாஸ் அறிவித்த ரூபாய் ஐந்து லட்சத்திற்காக இன்று வெளியேறும் முடிவை எடுத்தார். 
 
அவருடைய முடிவில் ஒரு ஒரு உள்ளர்த்தம் இருப்பதாகவும் தன்னுடைய முடிவை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுமாறும் அவர் சக போட்டியாளர்களிடம் சொல்லிவிட்டு சென்றார். 
 
இந்நிலையில் இன்று கமல் வரும் எபிசோட் என்பதால், கவின் குறித்து பேசிவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது அதற்கு ஏற்ப,சற்றும் வெளியான ப்ரோமோவில் நடிகர் கமல், கவின் ஏன் வெளியேறினார் என்பதை கவின்தான் சொல்ல வேண்டும். காத்திருங்கள் இன்று இரவு 9.30 மணிக்கு என தெரிவித்துள்ளார்.