புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (18:32 IST)

நடிகர் சுமன் இறந்துவிட்டதாக வதந்தி: கேஸ் போடுவேன் என எச்சரிக்கை!

suman
நடிகர் சுமன் இறந்துவிட்டதாக வதந்தி: கேஸ் போடுவேன் என எச்சரிக்கை!
பிரபல நடிகர் சுமன் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் தான் நன்றாக இருக்கிறேன் என்றும் தன்னை பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது கேஸ் போடுவேன் என்றும் சுமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ அருள் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சுமன். இவர் கடந்த 80 மற்றும் 90களில் பல திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகர் சுமன் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி விட்டதாக யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இந்த வதந்திக்கு பதிலளித்துள்ள சுமன் நான் நன்றாக இருக்கிறேன் என்றும் நான் இறந்து விட்டதாக பரவிவரும் வதந்திகளும் பொய்யானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் தன்னை பற்றி வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடரப் போவதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது