சிவாஜி பார்ட் 2 வா?... ஏ வி எம் நிறுவனம் கொடுத்த மாஸ் அப்டேட்!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் 2007 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும், புராதண தயாரிப்பு நிறுவனமான AVM நிறுவனமும் இணைந்து உருவாக்கிய திரைப்படம் சிவாஜி. கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீஸான சிவாஜி திரைப்படம் அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அதன் பின்னர் ஷங்கரும் ரஜினிகாந்தும் இணைந்து எந்திரன் மற்றும் 2.0 ஆகிய பிரம்மாண்ட படங்களை உருவாக்கினார்கள்.
இந்நிலையில் சிவாஜி ரிலீஸாகி 15 ஆண்டுகளை சில வாரங்களுக்கு முன்னர் நிறைவு செய்துள்ளது. அதைக்கொண்டாடும் விதமாக AVM நிறுவனம் சமூகவலைதளப் பக்கத்தில் பல சுவாரஸ்யமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்தது. அதையடுத்து இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர, அது வைரலானது.
இந்நிலையில் இப்போது சிவாஜி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாராக இருப்பதாக ஏவிஎம் நிறுவனத்தின் குகன் தெரிவித்துள்ளார். மேலும் கதை உள்ளிட்ட விஷயங்கள் தயாராக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அந்த படத்தை தயாரிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.