1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 ஜூலை 2021 (11:20 IST)

தமிழ் நடிகையை திருமணம் செய்கிறார் கவிஞர் சினேகன்!

தமிழ் நடிகையை திருமணம் செய்கிறார் கவிஞர் சினேகன்!
தமிழ் நடிகை ஒருவரை கவிஞர் சினேகன் திருமணம் செய்ய இருப்பதாக சற்றுமுன் தகவல் வழி உள்ளது 
 
தமிழ் நடிகை கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் கவிஞர் சினேகனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் சினேகன் மற்றும் கன்னிகா திருமணம் ஜூலை 29ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. இந்த திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமலஹாசன் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சினேகன் - கன்னிகா திருமணம் செய்தி வெளியானதையடுத்து தற்போது திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருமணத்திற்கு 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதால் மிகக் குறைந்த நபர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது