கமல்ஹாசனின் இந்தியன் பட நடிகை லோக்சபா தேர்தலில் போட்டி?

Last Updated: செவ்வாய், 26 மார்ச் 2019 (14:34 IST)
பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. 
 

 
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஊர்மிளா மடோன்கர் தமிழில், கமல்ஹாசன் நடித்த ’சாணக்கியன்’, ’இந்தியன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும்  ராம் கோபால் இயக்கிய ’ரங்கீலா’, ‘சத்யா’ உட்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் மலையாளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் மும்பை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை நடிகை ஊர்மிளா நேற்று சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சேர சம்மதம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்த வார இறுதியில் அவர் கட்சியில் சேர இருப்பதாகவும் அதன்பின் மும்பை வடக்கு தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவார் என்றும் மும்பை காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதை சஞ்சய் நிரூபமும் உறுதி செய்துள்ளார்.
 

 
மும்பையில் உள்ள 6 லோக்சபா தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ஊர்மிளா உறுதி செய்யப்பட்டால் அவர் பாஜக எம்.பி. கோபால் ஷெட்டியை எதிர்த்து போட்டியிடுவார். 


இதில் மேலும் படிக்கவும் :