1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஜூன் 2019 (14:07 IST)

இசைஞானி இளையராஜாவின் 76 ஆண்டு கால இசைப்பயணம்!

இசைஞானி இளையராஜா இன்று தனது 76 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பழமொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.
 
தாலாட்டை தாய் பாடுவதற்கும் பிறர் பாடுவதற்கும் உள்ள வித்தியாசமே இசைஞானியின் இசை அந்த அளவிற்கு தனது இசையில் முதல் காதல் அனுபவம் தொடரும் இனிய தோழமை , தாயின் மடியில் உறங்கும் சுகம் , துன்பத்தை மறக்கடிப்பது, இதயத்தை துடிக்க வைப்பது, இயற்கையான இசையை அறிவு கொண்டு ஆராயமால் அனுபவம் தந்து ரசிக்க வைப்பது என எல்லாவிதமான அனுபவங்களின் ஒட்டுமொத்த இசை வடிவம் தான் இசைஞானி இளையராஜாவின் இசை.
 
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆளும் அந்த மகா கலைஞனின் இசையை கேட்டு தற்போது வளர்ந்து வரும் வாரிசுகளும் மெய்சிலிர்த்து போவார்கள். பாமரனுக்கும் இசையின் உன்னதத்தை உணர்த்துவதற்காக இசையின் பழைய மரபுகளைப் பெயர்த்தெறிந்த புரட்சிக்காரர் அவர். 1975- மே 14-ம் தேதி வெளியான அன்னக்கிளி படத்திலிருந்து தமிழ் சினிமா புதிய இசை பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அன்று தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம், இந்த இசை 45 ஆண்டு காலமாக பிரம்மப்பின் உச்சத்திலேயே நிற்கிறதென்றால் கடவுள் யாருக்கும் கொடுக்காத அந்த ஆசீர்வாத்தை இளையராஜாவிற்கு கொடுத்துள்ளார். தற்போது வளர்ந்து வரும் பல்வேறு இசைக்கலைஞர்கள் கடவுளாக பார்க்கப்படும் ஜாம்பவான் இசைஞானி என்றால் அது மிகையாகாது.


 
தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில், ராமசாமி -சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு 1943ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி மகனாக பிறந்தவர் ராசய்யா. தன் சகோதரர்களுடன் இசைக்குழு நடத்திய ராசய்யா, 70-களின் நடுவில் இசை வாய்ப்புகள் தேடி சென்னைக்கு வந்தார். 
 
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஏ.எம்.ராஜா என்ற பிரபலமான இசையமைப்பாளர் இருந்தார். மேலுமொரு ராஜா வந்தால் வித்தியாசம் தெரியாமல் போய் விடும் என்று, ராஜாவை இளையராஜாவாக்கி விட்டார் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம். 1976-ல் இளைய ராஜாவை அன்னக்கிளி மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர் தான். 

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை 1000 படங்களுக்கும் மேல் 6000 பாடல்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார் ராஜா. அவற்றில் பாடல்கள் தாண்டி அவரது பின்னணி இசை பல படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. அந்த அளவிற்கு  இளையராஜா இசையின் தாக்கம் இல்லாமல் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் யாருமே இருக்க முடியாது.அவர்களுடைய பல பாடல்களில் எங்கேயோ கேட்ட இளையராஜாவின் சாயல் இருக்கும். அதை அவர்களும் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். 


 
அத்தகைய இசை ஜாம்பவான் இன்று தனது 76 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். நீங்கள் இன்னும் பல ஆண்டுகாலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.