திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:40 IST)

"பொம்மை" டீசர் மற்றும் ஆடியோ லான்ச் அதிரடி காட்டிய எஸ்.ஜே சூர்யா!

மான்ஸ்டர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர். 
 
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் தான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்தது. 
 
இந்நிலையில் அடுத்தகட்டமாக படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் எஸ். ஜே சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் " “பொம்மை” படப்பிடிப்பு பூசணிக்காய் உடச்சாச்சு ..... டீஸர் & ஆடியோ விரைவில்" வெளியாகும் என அறிவித்துள்ளார். வித்யாசமான கதையில் உருவாகும் இப்படத்தின் டீசரை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.