1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (11:50 IST)

பிரபல நடிகரின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த தனுஷ்!

ஒரு பிரபல நடிகரின் போஸ்டரை இன்னொரு பிரபல நடிகர் வெளியிட்டு வருவது கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் எஸ்ஜே சூர்யா நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
 
எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் வந்துள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்திற்கு ’பொம்மை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 
ஒரு பொம்மையுடன் கைகோர்த்து எஸ்ஜே சூர்யா நிற்கும் அட்டகாசமான இந்த படத்தின் போஸ்டரை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது
 
யுவன் சங்கர் ராஜா இசையில் ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக இந்த போஸ்டரை தனுஷ் வெளியிடுவார் என அறிவித்த எஸ்ஜே சூர்யா, தனுஷை தளபதியின் திரையுலக தம்பி என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது