செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (16:43 IST)

வேட்டை மன்னன் இயக்குனராக ஒப்பந்தம் ஆன நெல்சன்… சிவகார்த்திகேயனின் வாழ்த்து!

சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் கூட்டணியில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இயக்குனர் நெல்சன் 2010 ஆம் ஆண்டே சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தில் சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட் செய்யப்பட்ட பின்னர் ட்ராப் ஆனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்தே நெல்சனுக்கு கோலமாவு கோகிலா வாய்ப்பு கிடைத்தது.

அதே போல அவரிடம் உதவியாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முதல் ஐந்து சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். நெல்சனும் இன்று விஜய் படத்தை இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் கவனத்தைப் பெற்றுள்ளது.

அது என்னவென்றால் வேட்டை மன்னன் போஸ்டரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நெல்சன் பகிர, அதில் சிவகார்த்திகேயன் ‘கலக்குங்க அண்ணே’ எனக் கமெண்ட் செய்துள்ளார். அதற்கேற்றார்போல இருவருமே கலக்கியுள்ளனர்.