1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (09:08 IST)

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’… டிரைலரை வெளியிடும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று டிரைவர் ஜமுனா. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றன. போஸ்டர்களில் ரத்தம் சொட்ட சொட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும் காரின் முன் டீ  குடிக்கும் புகைப்படம் ஒன்றும் உள்ளது 

கேப் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கின்ஸ்லின் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை டிரைவர் ஜமுனா படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.