1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (10:52 IST)

முருகதாஸின் வார்த்தைகளால் நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்!

பாடலாசிரியர் ஆக இருந்த அருண்ராஜா காமராஜின் முதல் படம் கனா. அவரது நண்பரான சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தார். 


 
ஒரு சிறு கிராமத்திலிருக்கும் பெண்ணின் கிரிக்கெட் கனவும் அது நனவாக அவர் நடத்தும் போராட்டமும்தான் படத்தின் ஒன்லைன் கதை. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ்,  சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். சாதிக்க துடிப்பவர்களுக்கு ஊக்கம் தரும் கனா படத்தை பார்த்து பலராலும் பாராட்டி வருகிறார்கள்.

இதனால் டிசம்பர் 21ம் தேதி வெளியான கனா இன்றும் பல திரையரங்குகளில்  ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் அண்மையில் கனா படத்தை பார்த்து ரசித்து உள்ளார். 

இந்த படத்தை பாராட்டி உள்ள முருகதாஸ், 'சிறந்த திரைக்கதை உள்ள படம் கனா , கிரிக்கெட், விவசாயம் இரண்டையும் இணைக்கும் ஐடியா மிக அருமை, இறுதி காட்சியில் வரும் பேச்சு உணர்வு பூர்வமாக இருந்தது. எல்லாம் சூப்பர் ' என  புகழ்ந்து இருந்தார். இதனை பார்த்து நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன், உருக்கமாக நன்றி தெரிவித்தார். இதே போல் ஐஸ்வர்யா ராஜேஷ்ம் நன்றி தெரிவித்து உள்ளார்.