தென்ன மரத்துல ஒரு குத்து, பனமரத்துல ஒரு குத்து: சிவகார்த்திகேயன் கலகலப்பு பதில்

Last Updated: ஞாயிறு, 23 ஜூன் 2019 (17:38 IST)
நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டதற்கு தென்ன மரத்துல ஒரு குத்து பனமரத்துல குத்து என்று பதிலளித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சங்க தேர்தல் பல பிரச்சனைகளுக்கு பிறகு, தற்போது நிறைவடைந்தது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவ அணியும் ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸின் அணியும் மோதின.

மேலும் முன்னணி நடிகர்கள் பலரும் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்தனர்.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனிடம், செய்தியாளர்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு சிவகார்த்திகேயன் இரு அணிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் எனவும், ஆகையால் தென்னை மர சின்னத்துக்கு ஒரு குத்து, பனை மர சின்னத்துக்கு ஒரு குத்து என்று வடிவேல் நகைச்சுவையில் வருவது போல், கலகலப்பாக பதில் கூறினார்.

மேலும் அவர், யார் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் வெற்றி பெற்றாலும் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :