வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 23 ஜூன் 2019 (13:07 IST)

எல்லாரையும் குஷிபடுத்தனும்னா ஐஸ் கிரிம் தான் விக்கனும்:விஷால் ஆவேசம்

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால்,எல்லாரையும் குஷி படுத்தவேண்டும் என்றால், ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் தற்போது மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், ஐசரி கணேசனின் சுவாமி சங்கரதாஸின் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால், இந்த தேர்தல் தற்போது நடப்பதற்கு காராணமாக இருந்த நீதிபதிகளுக்கு, தான் மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துகொள்வதாகவும், இந்த தேர்தல் ஏற்கனவே அறிவித்திருந்த தேதியான ஜூன் 23-ல் நடப்பது பெரும் சந்தோசத்தை அளிக்கிறது எனவும் கூறினார்.

மேலும் தலைவராக இருந்துகொண்டு அனைவரையும்  சந்தோஷப்படுத்துவது முடியாத காரியம் என்றும், அப்படி சந்தோஷப்படுத்தவேண்டும் என்றால் நான் ஐஸ்கிரீம் தான் விற்கவேண்டும்” என்றும் கூறினார்.

இதற்கு முந்தைய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.