சைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா:காரணம் என்ன?

Last Modified ஞாயிறு, 23 ஜூன் 2019 (11:09 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் ஆர்யா இன்று காலை சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பல பிரச்சனைகளை கடந்து இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸின் அணியும் மோதுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து பல முன்னணி நடிகர்கள் நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து தனது வாக்கை அளித்தார்.

பொதுவாக ஆர்யா தினமும் காலை சைக்கிளிங் செல்வது வழக்கமாம். ஆதலால் இன்று காலை வழக்கம்போல் சைக்கிளிங் சென்று அப்படியே நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்துள்ளாராம்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யா, நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் நடிகர் சங்க கட்டடம் கட்ட கடுமையாக உழைத்தனர் என்றும், பிரச்சனைகளை இரு அணிகளும் பேசி தீர்த்து இந்த தேர்தலை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :