1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2023 (08:51 IST)

சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் ‘மாவீரன்’ படம் பார்க்கும் சிவகார்த்திகேயன்..!

maaveeran
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக சற்று முன் சிவகார்த்திகேயன் வருகை தந்தார். அவரை பார்ப்பதற்கு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் அவரது மாவீரன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தேசிய விருது பெற்ற மண்டேலா என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று சென்னை உள்பட தமிழக முழுவதும் மாவீரன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு சிவகார்த்திகேயன் சற்று முன் வருகை தந்தார். அவர் இந்த தியேட்டரில் சில நிமிடங்கள் படம் பார்ப்பார் என்றும் அதன் பிறகு சென்னையில் உள்ள ஒரு சில தியேட்டருக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva