ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2023 (07:26 IST)

சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதை அடுத்து தமிழகத்திலும் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
நேற்று முன்தினம் இரவு சென்னையில் நல்ல மழை பெய்த நிலையில் நேற்று மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை முக்கிய பகுதிகள் ஆன நுங்கம்பாக்கம், நந்தனம், கோட்டூர் புறம், அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் நள்ளிரவில் கன மழை பெய்தது. 
 
கடந்த சில மாதங்களாக சென்னையில் அதிக வெப்பம் இருந்து வந்த நிலையில் தற்போது மழை பெய்து தட்பவெப்பம் குளிர்ச்சியாக மாறியதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva