திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:47 IST)

புதிய பார்மட்டில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக அக்டோபர் 21ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் ஏற்கனவே தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படம் சென்னையில் சில திரையரங்குகளில் PLF எனும் 1:1.8 ரேஷியோ பார்மட்டில் ரிலீஸாக உள்ளது. இதற்கு முன்னதாக பீஸ்ட் திரைப்படமும் PLF பார்மட்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாதான் என்பது குறிப்பிடத்தக்கது.