திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (17:57 IST)

‘பிரின்ஸ்’ 3வது சிங்கிள் பாடல்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

prince
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் நாளை மாலை 5 மணிக்கு மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்\
 
இந்த பாடலை எழுதி பாடியவர் அறிவு என்றும் இந்த பாடலுக்கு தமன் கம்போஸ் செய்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் போல் இந்த பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது சிவகார்த்திகேயன் ஜோடியாக மரியா நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை அனுதீப் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva