வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2018 (16:26 IST)

சூர்யாவை முந்திய சிவகார்த்திகேயன்; அடுத்து அஜித்??

தமிழ் திரையுலகில் வெறும் குறைந்த படங்கள் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன், வேலைக்காரன் திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் மூலம் பாக்ஸ் ஆபிஸில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். 
 
தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் வைத்திருப்பவர் சூர்யா. கடந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி - 2, மெர்சல், விவேகத்தை தொடர்ந்து சிங்கம் - 3 இருந்தது.
 
ஆனால், சிங்கம் - 3 தமிழக வசூலை வேலைக்காரன் பின்னுக்கு தள்ளியுள்ளது. வேலைக்காரன் தமிழகம் முழுவதும் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளது. விவேகம் படம் ரூ.66 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இதையும் வேலைக்காரன் முறியடிக்குமா? என்ற எத்ரிப்பார்ப்பு உருவாகியுள்ளது.