1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 6 ஜனவரி 2018 (12:09 IST)

சூர்யா படத்திற்கு தடை; மல்லுகட்டிய ஆர்.ஜே. பாலாஜி

சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்த குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த அரசியல்வாதியை ஆர்.ஜே பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகிய பல படங்கள், சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், அன்றாட நிகழ்வுகளைப் பற்றியும், அரசியலில் நடைபெறும் குளறுபடிகளைப் பற்றியும் கருத்துகளை தெரிவித்து வருகின்றன. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம், மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி அப்படத்தை தடை செய்ய வேண்டும், என  அழுத்தம் கொடுத்தனர்.
 
இதனையடுத்து வரும் பொங்களுக்கு வெளியாக இருக்கும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு போட்டு பாடல் வரிகள் குறிப்பிட்ட கட்சியினரை விமர்சிக்கும் விதமாக உள்ளதால், படத்தை தடை செய்ய வேண்டும் என அரசியல்வாதி ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
 
இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஆர்.ஜே பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில், நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. போக்குவரத்து பாதிப்பால் மக்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளை செய்வதை விட, கட்சி நபர்களுடன் கலந்தோசித்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவுங்கள் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

பாலாஜியின் இந்த டிவீட்டுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் அவரை பாராட்டியும் வருகின்றனர்.