வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (10:48 IST)

மீண்டும் இணைகிறதா டாக்டர் கூட்டணி?

இரு தினங்களுக்கு முன்னர் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்துள்ளதை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 7.45 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் 2-வது நாளில் முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாளிலும் சேர்ந்து சுமார் 16 கோடி வசூல் செய்ததாகவும் கடந்த சில மாதங்களில் இது போன்ற வெற்றிப் படம் தமிழில் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் நெல்சன் – சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்ததும் இந்த படம் உருவாகலாம் என சொல்லப்படுகிறது.