ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (14:12 IST)

’டாக்டர்’ வெற்றியால் தனுஷூக்கு பொறாமையா? செல்வராகவனின் சர்ச்சை டுவிட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் நேற்று வெளியான ’டாக்டர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் அனைத்து விமர்சனங்களும் பாசிட்டிவாக வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உள்பட பலரும் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் என்ற தகவல் திரையுலகில் மகிழ்ச்சியானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தனுஷின் சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இன்னொருவர் நன்றாக இருக்க கூடாது என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நொடியே உங்களுக்கு குழி தோண்டப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் 
 
தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தனுஷின் படங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து தோல்வி அடைந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் படம் வெற்றி அடைந்துள்ளது என்பதை மறைமுகமாக தனுசுக்கு செல்வராகவன் அறிவுரை கூறியுள்ளதாக கூறப்படுகிறது