1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (14:31 IST)

எஸ் ஜே சூர்யா பேசிய சிவகார்த்திகேயன்… சிரித்து ரசித்த அஸ்வின்! வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யுடியூப் சேனலுக்கு சிவகார்த்திகேயன் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யுடியூபில் டி ஆர் எஸ் வித் அஷ் என்ற சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு உரையாடி வருகின்றனர். அந்த வகையில் இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் நடிகர் எஸ் ஜே சூர்யா போல மிமிக்ரி செய்து காட்ட, அதைப் பார்த்த அஸ்வின் சிரித்து ரசித்தார். இந்த வீடியோ துணுக்கை ரசிகர்கள் இணையத்தில் பகிர, அதைப் பார்த்த எஸ் ஜே சூர்யாவும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சிவகார்த்திகேயனும் எஸ் ஜே சூர்யாவும் இணைந்து நடித்துள்ள டான் திரைப்படம் விரைவில் ரிலிஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.