வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (12:28 IST)

டான் படத்த வச்சு செம்மயா கல்லா கட்டிய லைகா! இத்தனை கோடி லாபமா?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்டு இருந்தாலும் அந்த தேதியில் ’ஆர்.ஆர்.ஆர்.’  திரைப்படம் ரிலீஸ் ஆவதால் சிவகார்த்திகேயன் தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவார் என்று கூறப்பட்டது மேலும் ’ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை ரிலீஸ் செய்யும் லைக்கா நிறுவனம்தான் ‘டான்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் என்பதால் கண்டிப்பாக ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டது 

இந்த நிலையில் சற்று முன் சிவகார்த்திகேயன் ‘டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 13 என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் டான் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சிவகார்த்திகேயனுக்கு லைகா நிறுவனம் நன்றியும் தெரிவித்துள்ளனர். ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலிஸுக்காக தன்னுடைய டான் படத்தின் ரிலிஸ் தேதியை தள்ளிவைத்துக் கொண்ட சிவகார்த்திகேயனின் பெருந்தன்மைக்கு நன்றி எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் டான் படத்தின் பிஸ்னஸ் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டான் படம் ஒரு கல்லூரி கதை என்பதால் அதற்கு செலவு பெரிய அளவில் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிஸ்னஸ் இப்பொது தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் மூலமாக லைகா நிறுவனம் பெரும் தொகையை லாபமாக பெறும் என சொல்லப்படுகிறது. இதுவரை விற்பனையான ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையே பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம். இதனால் திரையரங்கு வெளியீட்டில் லாபம் கிடைக்கும் போது லைகா சுமார் 50 கோடிக்கும் மேல் லாபம் கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது. பல பெரிய படங்களை எடுத்துக் கையை சுட்டுக்கொண்ட லைகா டான் படம் மூலமாக மிகப்பெரிய லாபத்தை பெறவுள்ளது.