செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 20 நவம்பர் 2019 (18:03 IST)

"வலிமை" படத்திற்காக ஹாலிவுட் கார் சேசர் இறக்குமதி !

அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நேர்கொண்ட பார்வை பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில்  "வலிமை" படத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என கூறப்பட்டது. 
அண்மையில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. மேலும் , நவம்பர் முதல் வாரத்திலே வலிமை படப்பிடிப்பு  டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தது. ஆனால்,  தற்போது  வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் எதுவுமே தொடங்கவில்லை. இதனால் அப்டேட்டுகள் இல்லாமல் தவித்து வரும் அஜித் ரசிகர்கள் படப்பிடிப்பு தொடர்பாக பல கேள்விகளை கேட்டு பட குழுவினரை டார்ச்சர் செய்து வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது, வலிமை படத்திற்காக கார் சேசிங் காட்சிகளை பிரமாண்டமாக அமைத்துக் கொடுக்கும் ஹாலிவுட் கலைஞர்களில் ஒருவரான ஹென் கொலின்ஸ் என்பவரை படக்குழு தமிழகத்துக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹென் கொலின்ஸ்  ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு ண்டைக் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகளை அமைத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.