செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha
Last Updated : புதன், 20 நவம்பர் 2019 (14:17 IST)

காதலனை நம்பி ஏமாந்துவிட்டேன்...ஒரு நாளைக்கு 12 மாத்திரை - ரசிகர்களை ஷாக் ஆக்கிய இலியானா!

ஒல்லி பெல்லி இடுப்பழகி இலியானா குறுகிய காலத்தில் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வரத்தொடங்கினர். தமிழில் 'கேடி', படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் விஜய்யுடன் 'நண்பன்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
ஆனால் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் டல் அடித்ததால் பாலிவுட்டிற்கு பறந்தார். பின்னர் அங்குள்ள பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கடந்த சில வருடங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்து வந்தார். இதற்கிடையில் ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிஃபோனுடன் காதல் வயப்பட்டு, ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வைகையில் அடிக்கடி இருவரும் சேர்ந்து அவுட்டிங் செல்லும் புகைப்படங்ககளை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
 
பின்னர் திடீரென  இன்ஸ்டாகிராமில் நெருக்கமான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினர். மேலும் ஒருவருக்கொருவர் அன் பாலோ செய்துக்கொண்டனர் . இதன் மூலம் இவர்களது காதல் முறிந்துவிட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதைப்பற்றி இலியானா ஒரு வார்த்தை கூட கூறவில்லை. இந்நிலையில் தற்போது முதன் முறையாக தனது காதல் பிரிவு குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். 
 
ஆம், என்னுடைய , காதல் தோல்வியில் முடிந்து விட்டது.அவர் வேண்டாம் என்று முடிவு செய்த பின்புமீண்டும் அதனை பற்றி பேசி கிளறுவதால் எதுவும் நடக்கபோவதில்லை. ஒரு கட்டத்தில் என்னை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆனால், அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. கடந்த வருடம் கடுமையான உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டேன். ஒரு நாளைக்கு 12 மாத்திரை குடித்தேன். அத்தோடு வாரா வாரம் மருத்துவ பரிசோதனைக்கு சென்று வருவேன். இதனாலே கிடைத்த வாய்ப்பை கூட தவறவிட்டேன். இப்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறேன் என மிகுந்த மன தைரியத்துடன் தெரிவித்துள்ளார்.