வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 20 நவம்பர் 2019 (15:08 IST)

இவர் தான் என் காதலர்! திருமண அறிவிப்பை வெளியிட்டார் நிக்கி கல்ராணி!

தமிழ் சினிமாவிற்கு வருகைத்தந்த வேற்று மாநில நடிகைகள் பல பேர் குறுகிய காலத்தில் பேமஸ் ஆகி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். அந்தவகையில் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நிக்கி கல்ராணி கடந்த  2014-ம் ஆண்டு வெளியான "வெள்ளிமூங்கா" என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் தடம் பதித்தார். 
அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. பின்னர் தமிழில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டார்லிங்  படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படமும் வெற்றியடைய பின்னர் தமிழிலும் அவருக்கும் நல்ல கேரியர் இருந்து வந்தது. 
 
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிக்கி கல்ராணியிடம், திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்ட படவிழா ஒன்றில் அவரிடம் காதல் குறித்தும், திருமணம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. என்னுடைய காதலரை நான் சென்னையில் சந்தித்தேன்.அவரோடு தான் எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது. 3 ஆண்டுகளுக்குப் பின் எங்கள் திருமணம் குறித்த அறிவிப்பு வரும். இப்போதைக்கு அவரை பற்றி வேறு எதுவும் கூறமுடியாது ” என்று தெரிவித்துள்ளார்.