1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2023 (16:22 IST)

மாவீரன் முதல் ஷோ ஆரம்பிக்கும் முன்பே ரிவ்யூ வீடியோக்களைப் பதிவிட்ட யுட்யூப் சேனல்கள்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ரியாக்‌ஷன்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் இந்த படம் மாவீர்டு என்ற பெயரில் டப் ஆகி ரிலீஸ் ஆகிறது. படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு முதல் ஷோ ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இந்த படத்தின் பொதுமக்கள் ரிவ்யு வீடியோக்களை சில யுடியூப் சேனல்கள் வெளியிட்டன. ஆனால் அது உண்மையான ரிவ்யூ வீடியோ இல்லை. பழைய படங்களின் ரிவ்யூ வீடியோக்களை வெட்டி ஒட்டி மாவீரன் ரிவ்யூ போல உருவாக்கி இருந்தார்கள்.

இதைப் பகிர்ந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘முதல் ஷோவே 9 மணிக்குதான் ஆரம்பமாகிறது. அதற்குள் எப்படி பப்ளிக் ரிவ்யூ… எப்புர்றா” என நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.