திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஜூலை 2023 (19:54 IST)

’’மாவீரன்’’ படத்தைப் பாராட்டிய பிரபல இயக்குநர்!

maaveeran
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம்  நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தெலுங்கில் இந்த படம் மாவீர்டு என்ற பெயரில் டப் ஆகி ரிலீஸ் ஆகிறது.

மாவீரன்  படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த  நிலையில், இப்படத்தைப் பார்த்த கோலிசோடா, பென்சில் ஆகிய படங்களை  இயக்கிய விஜய் மில்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

’’வாழ்த்துக்கள் மடோனா அஸ்வின்  #Mandela  வுக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரமும் சேர்த்து #MAAVEERAN க்கு கிடைக்க விது அய்யன்னா, பரத் சங்கர், பிலோமிலன் ராஜ், நல்ல படம் எடுப்பவர்களுக்கும் வெகுஜன படத்துக்கும் இடையிலான தூரம் சமீப காலங்களில் கரைந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.