திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (18:01 IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ...பரவலாகும் சிசிடிவி வீடியோ

bike accident
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவடம் காளகஸ்தி நாதம்புரம்  பகுதியிலுள்ள பிரதான சாலையில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் இன்று வந்து கொண்டிருந்தன. அப்போது,  இடம்புறம் வருவதற்குப் பதில், பைக்கை ஓட்டி வந்தவர் வலது புறம் வந்துள்ளார.

எதிர்ப்புறம் வந்த மற்றொரு பைக்   அந்த பைக்கின் மீது மோதியது.  மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, வந்த காரில் எதிர்ப்புறம் வந்தவர்  மோதி சிறுது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.

இந்த விபத்தி ல், இரு இளைஞர்களும் காயங்களுடன் தப்பினர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.